எங்களைப் பற்றி

உண்மை | உழைப்பு | உயர்வு


1963 ஆம் ஆண்டு ஒரு சிறிய கல்வி விதையாகத் தொடங்கப்பட்ட கே. வேளூர் அரசு உயர்நிலைப்பள்ளி, பிறகு அரசு மேல்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டு, இன்று பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையை ஒளிரச் செய்த உன்னத ஆலவிருட்சமாக நிமிர்ந்து நிற்கிறது.

உண்மை, உழைப்பு, உயர்வு, ஒழுக்கம் மற்றும் அறிவு ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டு, கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தடையற்ற கல்விச் சேவையை நமது பள்ளி வழங்கி வருகிறது.


அன்று கரும்பலகையின் முன்னமர்ந்து கற்ற கல்வியும், மதிப்பிற்குரிய ஆசிரியப் பெருமக்கள் ஊட்டிய ஒழுக்க நெறியும் தான், இந்தச் சமூகத்தில் ஒரு நல்ல மனிதர்களாகவும் சாதனையாளர்களாகவும் நிமிரச் செய்துள்ளது.


புத்தகக் கல்வியையும் தாண்டி, விளையாட்டு, தொழிற்கல்வி மற்றும் சமூகப் பொறுப்புணர்வை மாணவர்களுக்குக் கற்றுத் தருவதே பள்ளியின் முதன்மை நோக்கமாகும்.


தலைமுறை கடந்தும் தடம் பதிக்கத் தொடங்கும் கே. வேளூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் இந்த அதிகாரப்பூர்வ டிஜிட்டல் தளம் (Website, YouTube & Instagram), உலகெங்கும் பரவி வாழும் பள்ளியின் முன்னாள், இந்நாள் மாணவ மாணவியர்களையும், ஆசிரியப் பெருமக்களையும் எப்போதும் அன்போடு இணைக்கும் ஒரு உன்னத பாலமாய் அமையும்!


தலைமை ஆசிரியர்
Mr. சி. பார்த்திபன்